9/11 தாக்குதல் புத்தகம் காமிக்ஸ் வடிவில்
இன்று ஐந்தாம் ஆண்டு நினைவு நாள். இன்று போல அன்றும் ஒரு சாதாரண நாளாகத்தான் தெரிந்தது. மாலையில் வீடு வந்து டிவியில் அனைத்தையும் பார்க்கும் வரை. அதற்குப் பிறகு எத்தனையோ முறை டிவியில். ஒரு நிலைக்கு மேல் பார்க்க முடியாத/சலிப்பான நிலை.
அதற்குப் பின் புலன் விசாரணை விவரணங்கள். முக்கியமாக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின்(Air Traffic Controllers) பார்வையிலிருந்து. என்னதான் எவ்வளவுதான் பார்த்தாலும், கேட்டாலும் “உலகம் மாறிவிட்டது” என்று சொன்னாலும் அன்றாட வாழ்க்கையில் அதன் தாக்கத்தை உணர்ந்தது மிக மிகக் குறைவு; விமானப் பயணங்களில் போது சிறப்புப் பாதுகாப்புச் சோதனைத் தவிர.
9/11 விசாரணைக் குழுவின் முழு அறிக்கையை அது வந்த சூட்டோடு வாங்கிப் படித்தபோது ஒரு திகில் நாவல் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.
அதில் ஏகப்பட்ட தகவல்கள்; சாதாரண மக்கள் புரிந்து கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
Slateல் பார்க்க
9/11 அறிக்கைப் புத்தகத்தை தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.